Become A Donor

Become A Donor
MUTUR JMI – Author, Publisher, Freelance Writer & Journalist

Contact Info

Bazar Mosque Road, Mutur, Trincomalee. Sri Lanka 31200

+94 77102 00308

info@muturjmi.com

Latest Posts

நூறு கவிதைகளும் கவிஞர்களும் – “தொகுதி 6 – நிழல்கள்”

“நூறு கவிகளும் கவிஞர்களும்” குழுமத்தின் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமான செயற்திட்டம்

“நூறு கவிதைகளும் கவிஞர்களும்”


தொகுதி 6 – நிழல்கள்

இலங்கையில் கவிதையில் மிளிர்ந்து வரும் கலைஞர்களுக்கான ஓர் களம்.
உங்கள் கவிதையும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையா ?
இதோ உங்களுக்கான சந்தர்ப்பம்

👉 மொத்தம் 16வரிகள். வரிக்கு நான்கு சொற்கள் வீதம் கவி படைக்கவும்.
👉 ஒவ்வொரு கவி வரிகளின் இறுதியிலும் “/” எனும் குறியீட்டினை இடவும்.
👉 எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
👉 தரப்படும் படத்திற்கு பொருத்தமானதாக உமது கவிதை இருத்தல் வேண்டும்.
👉 கவிதைக்கான தலைப்பையும் அதனோடு இணைக்க வேண்டும்.
👉 உங்கள் கவிதைகளை தரப்படும் கூகுல் படிவத்தில் மாத்திரம் பதிவு செய்யுங்கள்.
👉 கூகுள் படிவம் தமிழ் மொழியில் மாத்திரம் பூர்த்தி செய்தல் வேண்டும். படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிப்பது முக்கியமானது.
👉 நீங்கள் எழுதும் கவிதைகளை உங்களுக்கு தெரிந்த அனுபவம் வாய்ந்த கவிஞர்களிடம் பரீட்சித்து பார்த்து எமக்கு அனுப்பினால் இலகுவானதாக இருக்கும்
👉 கவிதை பதிவு செய்யும் பொழுது
கவிதையின் இறுதியில் உங்கள் பெயர், வதிவிடம், மாவட்டம் என்பவற்றை பதிவு செய்ய வேண்டும்

நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின் ஆறாவது தொகுதி நிழல்கள் நூலுக்கான கவிதைகளை பதிவு செய்ய விரும்பியவர்கள் கீழுள்ள google form மூலமாக மட்டுமே பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://forms.gle/x73oA4CQ2JN1ZouD9

உங்கள் கவிதைகளை பதிவு செய்யும் போது விதிமுறைகளை பேணிக் கொள்ளுங்கள்.

குழுவில் இணைந்து கொள்ள கீழுள்ள லிங்கை தொடருங்கள்
https://chat.whatsapp.com/IzJP9rv1MGrCVxaASkzPqz

மேலதிக தொடர்புகளிற்கு
நிழல்கள் நூலின் திட்ட இணைப்பாளர் மற்றும் தொகுப்பாசிரியர்


அனுசன் (0703907002) ,

ஷைபா பேஹம் (0751511331)

மூதூர் ஜே.எம்.ஐ நிறுவன தொடர்பிற்கு :0771383398 | 0717891887

Comments (3)

  • Reply ஹொரொவ்பொத்தான அகமட் இம்தியாஸ் - February 9, 2026

    140.மறைக்கப்பட்ட பக்கங்கள்

    – என் வாழ்க்கைப் புத்தகத்திற் சில பக்கங்கள் /
    அன்று எனக்கு தெரியவில்லை படிப்பதற்கு/
    – தேடவுமில்லை நான் இப்பயெதற்கு /தெரியத்தானே போகிறது என்கிற எண்ணம் போலயிருக்கு/
    – அந்த மறைக்கப்பட்ட பக்கங்களை பிடுங்கி படிக்க/
    இல்லை ஆர்வமும்
    மறைக்கத்தான் பட்டாலும்
    ஒருநாளும் திறக்காதா என்கிற நம்பிக்கை எனக்கிருந்திருக்கு/

    – நோய் எனைப் படுக்கையில் வீழ்த்துவதும் நான் தொழிலை இழந்து தேங்குவதும் /
    அதனால் என் குடும்ப வாழ்வே சிதைவதுவும் /
    – என்ன வாழ்க்கையடா என நான் சலிப்பதுவும்
    – சாவே மேல் என நான் எண்ணுவதுவும்/
    – எதுவுமில்லா பயலிவன் என சமூகம் என்னை ஒதுக்குவதுவும்/ என் வாழ்வு என்கிற புத்தகத்தில் மறைக்கப்பட்ட பக்கங்களில் கொட்டை யெழுத்துக்களால் அச்சேற்றி அழகுற அதுவும் –
    வடிவமைக்கப்பட்டேயிருந்த விதத்தினை பிறகு நானும் கண்டெடுத்து படித்துத்தான் நான் விட்டேனே/
    அட கொஞ்சம் நீங்களும் நில்லுங்களேன்/
    மறைக்கப்பட்ட பக்கங்களில் மகிழவும் சிலவை அச்சேறி அழகாய் பொறிக்கப்பட்ட விதங்களுந்தான்
    – மறைக்கப்பட்ட பக்கங்களிலே இருக்கக் கண்டேன் /
    சொல்கின்றேன் கேட்டுவிட்டு நீங்களும் போகலாமே/
    – உற்றார் உறவினர் பொழிகின்ற அன்பின் அழகும் உண்மையும் மறைக்கப்பட்ட பக்கங்களிலே அழகாய்த்தானே இருந்திருக்கு/
    உயிராய் என்னை நேசிக்கும் இல்லாள் மனதும் அதிலிருக்கு
    போலி நட்புகள் எந்தளவு என்னைப்பாடாய்ப் படுத்தியிருக்கு/ பாருங்களேன் அதெல்லாம் ஏனோ எனக்கு மறைக்கப்பட்ட பக்கங்களில்தான் அழகாய்க்
    காட்டப் பட்டிருக்கு
    நான் பெறும் பட்டங்கள் பதவிகளும் ஏன்தான் அதிலே இருந்திருக்கோ?
    தோல்விகள் பலவும்
    வாசிக்க இலேசாய் இருந்தாலும் மறைக்கப்பட்ட பக்கங்களிற்றான் வெற்றிகள் பலவும் பொதிந்திருக்கு/
    – மறைக்கப்பட்ட பக்கங்களை நாம் படிப்பதிற்றான் நிஜமான சுகங்கள் நிறைந்திருக்கு/
    வாழ்க்கைப்புத்தகம்
    பலவகை காகிதங்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் என்பது மட்டுமா உங்களெண்ணம்?/
    – மறைக்கப்பட்ட பக்கங்கள்
    – இருள் வெளிச்சம்
    மௌனம் சப்தம்
    முட்கள் மலர்கள்
    – வெற்றிகள் தோல்விகள்
    மகிழ்ச்சி துன்பம் பாசம் துரோகம் அடிதடி அமைதி ஏற்றம் இறக்கம்
    பாசம் பகைமை
    உண்மை நடிப்பு என பலவும் கொண்டவை/
    கண்டுபிடிக்க இயலா அவற்றை வேறுவேறாக அதனாற்றான் அவை மறைக்கப்பட்ட பக்கங்கள்/

  • Reply ஹொரொவ்பொத்தான அகமட் இம்தியாஸ் - February 9, 2026

    140.மறைக்கப்பட்ட பக்கங்கள்

    – என் வாழ்க்கைப் புத்தகத்திற்
    சில பக்கங்கள்
    அன்று எனக்கு தெரியவில்லை படிப்பதற்கு/
    தேடவுமில்லை நான்
    இப்பயெதற்கு தெரியத்தானே போகிறது என்கிற எண்ணம் போலயிருக்கு/
    அந்த மறைக்கப்பட்ட பக்கங்களை பிடுங்கி படிக்க
    இல்லை ஆர்வமும்
    மறைக்கத்தான் பட்டாலும்
    ஒருநாளும் திறக்காதா என்கிற நம்பிக்கை எனக்கிருந்திருக்கு/

    – நோய் எனைப் படுக்கையில் வீழ்த்துவதும் நான்
    தொழிலை இழந்து தேங்குவதும் / அதனால் என் குடும்ப வாழ்வே சிதைவதுவும்
    – என்ன வாழ்க்கையடா என நான் சலிப்பதுவும் /
    – சாவே மேல் என நான் எண்ணுவதுவும்
    – எதுவுமில்லா பயலிவன்
    என சமூகம் என்னை ஒதுக்குவதுவும்/
    என் வாழ்வு என்கிற புத்தகத்தில் மறைக்கப்பட்ட பக்கங்களில் கொட்டை யெழுத்துக்களால் அச்சேற்றி அழகுற அதுவும் –
    வடிவமைக்கப்பட்டேயிருந்த விதத்தினை பிறகு நானும் கண்டெடுத்து படித்துத்தான் நான் விட்டேனே
    அட கொஞ்சம் நீங்களும் நில்லுங்களேன்/
    மறைக்கப்பட்ட பக்கங்களில் மகிழவும் சிலவை அச்சேறி அழகாய் பொறிக்கப்பட்ட விதங்களுந்தான்
    இருக்க நானும் கண்டேனே/
    சொல்கின்றேன் கேட்டுவிட்டு நீங்களும் போகலாமே
    உற்றார் உறவினர் பொழிகின்ற அன்பின் அழகும் உண்மையும் மறைக்கப்பட்ட
    பக்கங்களிலே அழகாய்த்
    தானே இருந்திருக்கு/
    உயிராய் என்னை நேசிக்கும் இல்லாள் மனதும் அதிலிருக்கு
    போலி நட்புகள் எந்தளவு என்னைப்பாடாய்ப் படுத்தியிருக்கு/ பாருங்களேன் அதெல்லாம் ஏனோ எனக்கு மறைக்கப்பட்ட பக்கங்களில்தான் அழகாய்க்
    காட்டப் பட்டிருக்கு/
    நான் பெறும் பட்டங்கள் பதவிகளும் ஏன்தான் அதிலே இருந்திருக்கோ?
    தோல்விகள் பலவும் வாசிக்க இலேசாய் இருந்தாலும்/
    மறைக்கப்பட்ட பக்கங்களிற்றான் வெற்றிகள் பலவும் பொதிந்திருக்கு/
    – மறைக்கப்பட்ட பக்கங்களை நாம் படிப்பதிற்றான் நிஜமான சுகங்கள் நிறைந்திருக்கு/
    – வாழ்க்கைப்புத்தககம்
    பலவகை காகிதங்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் என்பது மட்டுமா உங்களெண்ணம் ?/
    – மறைக்கப்பட்ட பக்கங்கள்
    – இருள் வெளிச்சம்
    மௌனம் சப்தம்
    முட்கள் மலர்கள்
    – வெற்றிகள் தோல்விகள் மகிழ்ச்சி துன்பம் பாசம் துரோகம் அடிதடி அமைதி ஏற்றம் இறக்கம் பாசம் பகைமை
    – உண்மை நடிப்பு என பலவும் கொண்டவை
    – கண்டுபிடிக்க இயலா அவற்றை வேறுவேறாக
    அதனாற்றான் அவை மறைக்கப்பட்ட பக்கங்கள்/

    அ.தா.அகமட் இம்தியாஸ்
    ஹொரொவ்பொத்தான
    அநுராதபுர மாவட்டம்

    -ஹொரொவ்பொத்தான அகமட் இம்தியாஸ்

  • Reply Ravikrishna - February 11, 2026

    39.பேசாத சந்திப்பு

    ​விடியற் காலையிலே வீறு கொண்டு எழுந்தபடி//
    பொன்னிறக் கதிரவனும் வரவதனை மிளிரவிட்டான்//
    எதிரே நீயும் மௌனத் தவம் கலைக்காதபடி//
    ஏதும் சொல்லாமல் இமைகளால் கதை பேசினாய்//

    ​வார்த்தைகள் கோர்க்காத ஒரு விசித்திர மொழி//
    வாக்கியங்கள் இல்லாமலே அங்கே அர்த்தம் தந்திருந்தாய்//
    உதடுகள் அசையவில்லை உள்ளம் மட்டும் அதிர்ந்தது//
    உறையும் நேரத்திலும் நம் உணர்வுகள் கலந்தது//

    ​காற்றின் சலசலப்பும் காகத்தின் கரைதலும்//
    நமக்கு மட்டும் கேட்காத இன்னிசையாய் மாறியது//
    சொல்லாத சேதிகள் ஆயிரம் மௌனத்தில் கலந்திருக்க//
    சொல்லி முடித்த திருப்தியினால் கண்களோ கலங்கியது//

    ​காலமது நகர்ந்திடினும் இந்தக் கணம் நிலையானது//
    கருத்து மோதல்கள் அற்றக் கவிதையும் இதுவானது//
    பேசாத சந்திப்பில் பிரிந்து நாம் சென்றாலும்//
    பேசும் மௌனங்கள் நெஞ்சில் என்றும் வாழுமடி//
    __________________________
    கவிஞர் ரவிகிருஷ்ணா
    கிரான்குளம்
    மட்டக்களப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*

situs depo 5k slot depo 5k slot deposit 5000 slot777 slot gacor777 situs slot gacor777 slot depo 5k