கதை சொல்லியும், சர்வதேச புகழ் எழுத்தாளுருமான பவா செல்லத்துரை அவர்களின் உரையாடலோடு இந்திய பதிப்பகங்களின் நூல்களின் விற்பனை சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் இன்று 29 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது “வாசிப்பு பரவலாக்கம்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச இணைப்பாளர் Fausar Mahroof அவர்களின் ஒருங்கிணைப்புடன் நாடளாவிய ரீதியான தொடர் செயற்பாட்டின் ஓர் அங்கமாக திருகோணமலை மூதூர் மண்ணில்
அனாமிகா, மூதூர் ஜே.எம்.ஐ, மானுடம் நிறுவனம் போன்ற அமைப்புகளின் ஒழுங்கமைப்புடன் சிறப்புற நடைபெற்றது.
மூதூரில் தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளான சேனையூர் மத்திய கல்லூரி மற்றும் அல்ஹிதாயா மகா வித்தியாலய நூலகங்களுக்கு ரூபா 40,000.00 பெறுமதியான ஒருதொகை நூல்கள் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.