ஒன்லைன் மூதூர் வாசகசாலையின் குழும அங்கத்தவர்களை இலக்கியத்தின்பால் வலுப்படுத்தும் வேலைத்திட்டம்
நூறு கவிதைகளும் கவிஞர்களும் தொடர் வெளியீட்டைத் தொடர்ந்து சிறுகதைத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளை வலுவூட்டவும் அவர்களுக்கான களத்தை உருவாக்கவும் மூதூர் ஜே.எம்.ஐ வெளியீட்டகத்தின் அனுசரணையில் மூதூர் ஒன்லைன் வாசகசாலை இணைந்து செயற்படுத்தும் இலக்கிய முயற்சி.
சிறுகதை பதிவு செய்பவர்கள் கவனத்திற்கொள்ளவேண்டியவை…
👉 உங்கள் சிறுகதையானது 500 சொற்களுக்கு குறையாமலும் 1000 சொற்களுக்கு உட்பட்டதாக இருத்தல்.
👉 கதைக்கருவை மையமாகக் கொண்டு கதை நகர்தல் அவசியம்.
👉 வேறு சிற்றிதழ், மின்னிதழ்கள், பத்திரிகையிலோ பிரசுரிக்காத சிறுகதையாக இருத்தல் கட்டாயமாகும்.
👉 எழுத்துப்பிழை, சொற்பிழையின்றி தட்டச்சு செய்யப்பட்டு கூகிள் போம் இல் பதிவிடப்படல் வேண்டும்.
👉 சிறுகதையின் தலைப்பு, எழுத்தாளரின் பெயர், வதிவிடம் தெளிவாக சிறுகதையின் தொடக்கத்திலேயே பதிவிடப்படல் வேண்டும்.
👉 சிறுகதையாளர்கள் உங்கள் பாஸ்போட் அளவு நிழல்படத்தின் நகலை அனுப்பினால் சிறுகதையுடன் பிரசுரிக்கப்படும். ஆயினும் நிழல்படம் கட்டாயமல்ல.
👉 இக்களமானது இளையோருக்கும், புதிதாக எழுதுவோருக்கும் முன்னுரிமை வழங்கும்.
👉 சிறுகதைகளின் தெரிவு, நிராகரிக்கும் உரிமை தெரிவுக்குழுவுக்கு உரித்தானது.
👉 தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானது.
ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் ஆக்கங்களை அனுப்பு வைக்கவும். மேலதிக தகவல்களை எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்வதனூடாக அறிந்துகொள்ளமுடியும்.
செயற்திட்ட இணைப்பாளர் திருகோணமலை கனக தீபகாந்தன்