மூதூர் அந்-நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் கீழ் இயங்கும் அந்-நுஸ்ரா பாலர் பாடசாலையின் வருடாந்த மாணவர் பிரியாவிடை நிகழ்வு இன்று மூதூர் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் அந்-நுஸ்ரா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.இர்பான் அவர்களின் தலைமையில் இன்று 22.12.2024 காலை 9.00 மணி அளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாலர் பாடசாலை பணிப்பாளர் எஸ்.மஜூன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்வில் பாலர் பாடசாலையில் இருந்து பாடசாலைக்கு கல்வி பயில அனுமதிபெறும் 22 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி Mutur JMI Organization நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் அவர்களினால் அந்-நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு கையளிப்பு செய்யப்பட்டது.