மூதூர் பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறும் பிரதேச கலை இலக்கிய விழா மூதூர் பிரதேச செயலகமும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா 2024 நாளை மாலை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கலாசார அதிகார சபை நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான 46,240.00 பெறுமதியான பரிசுகள் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவனத்தினால் இன்று (17.12.24) பிரதேச செயலாளர் எம்.பி.முபாறக் அவர்களின் முன்னிலையில் கலாசார உத்தியோகத்தர்களான பஷீர், லலிதா ஆகியோருக்கு JMI நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் முஹம்மட் இஹ்ஸான் அவர்களினால் கையளிப்பு செய்யப்பட்டது.
குறித்த பரிசுகளை அன்பளிப்பு செய்ய நிதி உதவி அளித்த Mutur JMI நிறுவன பணிப்பாளர்களான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஹம்மட்அமீன் (தமிழ் நெஞ்சம் சஞ்சிகை) அவர்களுக்கும் தொழில் நிமிர்த்தம் UAE பணிபுரியும் பொறியியலாளர் ஷப்ரூல்இன்பாஸ் அவர்களுக்கும் நிறுவனத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.