ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் செயற்திட்டமாக முன்னெடுக்கப்படும் இளம் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்பளிக்கும் களமாக செயற்படும் நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின் நான்காவது தொகுதி நூலுக்கான கவிதைகள் கோரப்பட்டுள்ளது.
ஆரவமுள்ள இளம் படைப்பாளிகள் கீழுள்ள நிபந்தனைக்கு ஒழுகும் வகையிலான தங்கள் கவிதைகளை பதிவு செய்யமுடியும்.
மேலும் இதற்கு முன்னர் வெளிவந்த இறகு, விழுதுகள் மற்றும் விண்மீன்கள் நூலில் தங்கள் கவிதைகளை பதிவி செய்த நபர்களில் முதலாவது தொகுதி நூலில் பங்குபற்றிய கவிஞர்களுக்கு இந்த நூலில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
நிபந்தனைகள்
✨ மொத்தம் 16வரிகள். வரிக்கு நான்கு சொற்கள் வீதம் கவி படைக்கவும்.
✨ஒவ்வொரு கவி வரிகளின் இறுதியிலும் ” / ” எனும் குறியீட்டினை இடவும்.
✨எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
✨தரப்படும் தலைப்புக்குப் பொருத்தமானதாக உமது கவிதை இருத்தல் வேண்டும்.
உங்கள் கவிதைகளை தரப்படும் கூகுல் படிவத்தில் மாத்திரம் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் எழுதும் கவிதைகளை உங்களுக்கு தெரிந்த அனுபவம் வாய்ந்த கவிஞர்களிடம் பரீற்சித்து பார்த்து எமக்கு அனுப்பினால் இலகுவானதாக இருக்கும்

உங்கள் கவிதைகளை திகதி 20.01.2025 இற்கு முன் பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.
அதன் பின் வரும் எந்த கவிதைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இலங்கையில் கவிதையில் மிளிர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கான ஓரு களம்




