Become A Donor

Become A Donor
MUTUR JMI – Author, Publisher, Freelance Writer & Journalist

Contact Info

Bazar Mosque Road, Mutur, Trincomalee. Sri Lanka 31200

+94 77102 00308

info@muturjmi.com

Latest Posts

“நூறு இலக்கிய ஆளுமைகளின் நூறு இலக்கிய வெளியீடுகள்”

“நூறு இலக்கிய ஆளுமைகளின் நூறு இலக்கிய வெளியீடுகள்”
முற்றிலும் இலவசம்

தமிழ் நெஞ்சம், மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன் மற்றும் ஏட்டுலா கணவாக்கம் நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன் இவ்வாண்டு மாபெரும் நூல் வெளியீட்டுத் திட்டம்.

நிபந்தனைகளும் விதிமுறைகளும்

✔இலங்கையராக இருத்தல். அல்லது இலங்கையர் வெளிநாட்டில் தொழில் நிமிர்த்தம் வசிப்பவராக இருத்தல்.

✔நூலின் வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு மற்றும் ISBN இலக்கம் என்பன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.

✔ நூலின்உள்ளடக்கம் 88~124 பக்கங்களுக்கு உட்பட்ட வகையில் அமையப் பெறுவதோடு குறித்த நூலில் இடம்பெறும் உரைகள் (வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை) யாவும் நூலாசிரியரின் விருப்பத்திற்கு உரியது.

✔ வெளியிடவுள்ள நூலின் தட்டச்சு செய்த ஆவணம் எதிர்வரும் March 20 ஆம் திகதிக்கு முன்னர் தரப்படும் Google Form ஊடாக அனுப்புதல். (கையெழுத்து பிரதியாயின் அவற்றை தட்டச்சு செய்யும் செலவு நூலாசிரியருக்குரியது)

✔ இவ்வாண்டு ஜூன் 29 ஆம் திகதி நூல் வெளியீடு இடம்பெறும். குறித்த வெளியீட்டு நிகழ்வில் தேர்வு செய்யப்படும் தரமான 100 நூல்கள் வெளியீடு செய்யப்படுவதோடு நூலாசிரியர்களும் கௌரவிக்கப்படுவார்கள்.

✔ தங்களுக்கு தேவையான நூல்களின் பிரதிகளை நூலாசிரியர், வாசகர்கள் பணம் கொடுத்து குறித்த நிகழ்வில் இடம்பெறும் நூல் காட்சியில் பெற்றுக்கொள்ள முடியும். 100க்கு மேற்பட்ட பிரதியாயின் முற்கூட்டியே அறியத்தரவும்.

✔ குறித்த நூல்கள் நூலாசிரியரின் அனுமதியின்றி பதிப்பு செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ நிறுவனத்தி னால் உரிமம் கோரப்படமாட்டது என்பதோடு அந்நூற்களுக்கான பதிப்புரிமை ஆசிரியருக்கே உரித்தாகும்.

✔ நூல் பதிப்பு மற்றும் வெளியீட்டுக்கான செலவுகள் மற்றும் கொடுப்பனவுகள் எதுவும் நூலாசிரியர்களிடம் இருந்து அறவிடப்படமாட்டது. மேலும் எந்தவித மறைமுக கட்டணமும் அறவிடப்படமாட்டது.

Visit our site
Websit – www.muturjmi.com
Mail – info@muturjmi.com
Facebook – Mutur JMI
Contact – 0771020030 | 0262238593

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*